Allah Munajat – அல்லாஹ் முனாஜாத்

Note: text of Allah Munajat and an audio rendition can be found below

Allah Munajat is an entreaty to the Divine in the Tamil language. It was composed by Habib Muhammad Sadaqatullah—a widely acclaimed Tamil Muslim savant and saint of the 20th century.

By Allah’s permission, if recited once in the morning and in the evening, it has proven to be a panacea even for illnesses and diseases that do not have known cures. It is a shield of protection in times of plagues, epidemics and other tribulations.

The Palanquin Saint

Undated picture of Pallak Waliyullah

Habib Muhammad Sadaqatullah – the palanquin saint

Habib Muhammad Sadaqatullah (1268-1360 AH/1851-1941 AD), popularly known as Pallak Waliyullah or “the palanquin saint”, was a nephew and Khalifah of Imam al-‘Arus Sayyid Muhammad b. Ahmad Lebbai—the eponymous founder of the ‘Arusi branch of the Qadiri Sufi order. He was a scholar of the Arabic language and an acclaimed saint whose karamat or “miracle working” were manifest.

Together with his spiritual master, he went to the Hijaz and visited other parts of the Islamic world in 1870. On return, he visited many parts of India and Sri Lanka as a missionary. In his twilight years, he was carried from town to town in a palanquin to deliver religious discourses and render spiritual counsels.

The Allah Munajat here was one of his many compositions, some of which have been published in various anthologies and prayer books. Even in his old age, with trembling hands, he would write. Whilst in ecstatic states, he would also utter verses of profound spiritual value.

He breathed his last on 26 Rabi’ al-Akhir 1360 and was laid to rest in a compound by the coast at Kilakkarai, Tamil Nadu, India. May Allah Most High be pleased with him, sanctify his secret, illuminate his grave, and make it an outpouring of spiritual emanation.

Audio of Allah Munajat

Text of Allah Munajat

https://www.scribd.com/document/369115544/Allah-Munajat

(1) அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்வே
அடியாரைக் காக்கும் அல்லாஹ்வே
எல்லாம் வல்ல அல்லாஹ்வே
எங்களைக் காக்கும் அல்லாஹ்வே
சல்லல் லாநபி பொருட்டாலும்
சங்கடம் போக்கும் அல்லாஹ்வே
இல்லல் லாஹ்வெனும் அல்லாஹ்வே
ஏழை எங்களைக் காப்பாயே! (அல்லாஹ்)

(2) அவ்வலோனே ஆகிரோனே
அடிமுடி ஒன்றும் இல்லானே
எவ்வுயிருக்கு மிரணமெலாம்
எழுகடல் வானம் பூமியெலாம்
ஒவ்வும் படியாயமைத்து வைத்து
உவப்புடன் எவ்வுயிர்க் கெல்லாமும்
செவ்வையா யுதவி யீபவனே
சிறப்பாய் எங்களைக் காப்பாயே! (அல்லாஹ்)

(3) அன்னையும் தந்தையும் நீதானே
ஆளும் ராஜனும் நீதானே
என்ன பிழைகள் செய்தாலும்
எதையும் பொருப்பவன் நீதானே
நின்னயமான ஆயுட்களை
நீடிப்பவனும் நீதானே
பின்னமான பலாய்க ளெல்லாம்
பிரியவருள் செய் றஹ்மானே! (அல்லாஹ்)

(4) தொற்று நோயும் தொடர் நோயும்
திடீரெனக் கொல்லும் வபாநோயே
சித்தம் பதறும் இந் நோயை
சிறிதும் ஊரில் நில்லாமல்
பற்றியடித்துத் துரத்திடுவாய்
பரனே எங்களைக் காப்போனே
கர்த்தா இகபரம் படைத்தோனே
காப்பாய் எங்கள் றஹ்மானே! (அல்லாஹ்)

(5) ஆதம் நபிகள் பொருட்டாலும்
அதன்பின் நபிகள் பொருட்டாலும்
நீதிநம் பிராட்டிகள் பொருட்டாலும்
நான்குயர் சஹாபாக்கள் பொருட்டாலும்
வேத மொழிப்படி நடந்தொழுகும்
வலிமார் குத்புகள் பொருட்டாலும்
சீத நோய்கள் பலாய்க ளெல்லாம்
தீர்ப்பாய் எங்கள் றஹ்மானே! (அல்லாஹ்)

(6) உலகின் முஃமின்கள் பொருட்டாலும்
உண்மை முஸ்லிம்கள் பொருட்டாலும்
நலமுறுந் தவத்தோர் பொருட்டாலும்
நல்லடியார்கள் பொருட்டாலும்
பலமுறும் கொடையோர் பொருட்டாலும்
பசித்தோருக் களித்தோர் பொருட்டாலும்
தலமீதுறும் பெறும் பலாய்களெலாந்
தடைசெய் தருள்வாய் ற‌ஹ்மானே! (அல்லாஹ்)

(7) கண்ணை யிமைபோற் காப்பவன் நீ
கல்லினுள் தேரையைக் காத்தவன் நீ
எண்ணறு நாமம் உள்ளவன் நீ
ஏகமு நிறை ஸமதானவன் நீ
பெண் ஆண் என‌ வகை படைத்தவன் நீ
பெரும்பெரும் ஆலங்கள் வகுத்தவன் நீ
மண்ணினில் வந்த வபா நோயை
மறைந் தொழிந்திடச் செய் ற‌ஹ்மானே! (அல்லாஹ்)

(8) நேர்வழி ஃபுர்க்கான் தந்தவன் நீ
நின்னடி யார்களைக் காப்பவன் நீ
பேர்பெருஞ் செல்வந் தருபவன் நீ
பிரியமா யெங்களைக் காப்பவன் நீ
கூர்மை அறிருகள் தருபவன் நீ
குறைவற வுஜீவனந் தருபவன் நீ
ஊரினில் வந்த பலாய்களெல்லாம்
ஓட்டி யழித்திடு றஹ்மானே! (அல்லாஹ்)

(9) அற்பமாங் கர்ப்பக் குவளறையில்
அன்புட னெங்களைக் காத்தவன் நீ
உற்பத் தீரைந்து மாதங்களில்
உறுப்புட னுலகினில் விட்டவன் நீ
நற்சுக மாய்த்தவழ்ந் தெழுந்திருந்து
நடக்கவும் இருக்கவும் வைத்தவன் நீ
துர்க்குண முளநோய் எங்களிடந்
தொடரா தருள்செய் றஹ்மானே! (அல்லாஹ்)

(10) ஆறா யிரத்தி யறுநூற்றி
யறுபத் தாறு ஆயத்தினில்
சூறா நூற்றிப் பதினான்கில்
சொல்லும் ஏவல் விலக்கல்களை
கூறி முடித்திற சூல்மூலம்
குஃபிர்கள் விலகச் செய்தவன் நீ
தேறும் இவ்வேதப் பொருட்டால்
தீர்ப்பாய் குறைகள் றஹ்மானே! (அல்லாஹ்)

(11) வாதம் பித்தம் சிலேத்மங்களில்
வகை வகை யாய்வரும் பெருநோய்கள்
பேதமுறும் பெரும் பைத்தியங்கள்
பிசகுறுங் காசங் கண்ணாசை
தீதுறும் வாதம் என்பதுவுந்
தீராப் பக்க வாதங்களும்
ஏதும் வாரா தெங்களுக்கு
இரங்கிக் காப்பாய் றஹ்மானே! (அல்லாஹ்)

(12) ஜுரங்கள் ஜன்னிகள் சூதகநோய்த்
துன்பஞ் செய்யும் பெரும் பாடு
முரண்கள் செய்யும் மூலநோய்
முகங்கால் வீங்கும் பாண்டுநோய்
சிரநோ யான பித்தநோய்
சிரமஞ் செய்யும் நீரிழிவு
பிறவு நோய்க ளணுகாமற்
பேணிக் காத்தருள் றஹ்மானே! (அல்லாஹ்)

(13) கொம்பன் படுவன் அக்ரமெனுங்
கொடிய வாந்தி பேதி நோய்
வெம்பும் வெள்ளை வெட்டை நோய்
வெறுப்புறும் அம்மை வைசூரி
அம்புவிக் காகா பிளேக் நோயும்
ஆறாக் குஷ்டப் பதினெண்ணோய்
துன்பஞ் செய்யும் பலநோயுந்
தொடரா தருள் செய் றஹ்மானே! (அல்லாஹ்)

(14) கண்ட நோயுங் கண்ணோயுங்
கர்ப்பா சயத்தில் வருநோயும்
அண்ட நோயும் அபநோயும்
அஷ்ட குன்மங் கொடுவாய்வும்
தண்ட நோயுந் தடைநோயுந்
தடிக்கா லானைக் கால்நோயும்
சண்டி நோயும் வாராமல்
தயவாய்க் காத்தருள் றஹ்மானே! (அல்லாஹ்)

(15) கண்ணோய் தொண்ணூற்றாரு வகை
கடினமான மண்டை நோய்
பெண்ணாண் மலடு பேர் வ‌ருத்தம்
பிடுங்கிப் பிழியும் வயிற்றுவலி
உண்ணா திருக்கு மோங்காரம்
உருட்டுப் புரட்டு சதிவிக்கல்
ஃஹண்ணா சால்வரும் நோய்களெல்லாங்
காணா தருள்செய் றஹ்மானே! (அல்லாஹ்)

(16) பில்லி சூனியம் மனப்பேதம்
பிரிந்திடச் செய்யும் முகமாற்று
கொல்ல நினைத்துச் செய்சூது
குரளி யேவல் மாரணங்கள்
வெல்லுங் கன்மஞ் சாபங்கள்
விதியி னால்வருந் துன்பங்கள்
பொல்லா வறுமை நோய்களையும்
நில்லா தருள்செய் றஹ்மானே! (அல்லாஹ்)

(17) துற்குண முளஜின் ஷைத்தான்கள்
தேவதை மற்றும் பிசாசினங்கள்
பற்பல வான குபாடங்கள்
பகைஞரி னால்வரும் இடையூறு
அற்பர்களின் சக‌ வாசங்கள்
அறநெறி தவறுந் துவேஷங்கள்
தப்பித முளபெருந் தங்கடமுந்
தளர்த்தி யருள்வாய் றஹ்மானே! (அல்லாஹ்)

(18) ஆங்கா ரமுடன் வருநோயும்
அவுஷத மில்லா மாநோயும்
ஏங்கித்தின‌றும் மரண நோய்
ஈழை யிளைப்பு நீரடைப்பு
நான்கா யிரத்தி நானூற்றி
நாற்பத் தெட்டு நோய்களையும்
நாங்கள் காணா தோடிடச்செய்
நல்வழி காட்டும் றஹ்மானே! (அல்லாஹ்)

(19) திருடர் தனிவழி யாபத்துந்
தீயினால் வ‌ருந் தங்கடங்கள்
மிருகங்களினால் ஆபத்தும்
மிடிமையினால் வ‌ரும் முஸீபத்தும்
அரவங்கடி விஷம் மறுவிஷங்கள்
ரணங்கள் கட்டிகள் பிளவைகளும்
திருஷ்டிகள் யாவும் அணுகாமல்
தயவாய் காத்தருள் றஹ்மானே! (அல்லாஹ்)

(20) பயிர்கள் தாவர வர்க்கங்கள்
பலந்தரும் மரங்கொடி பச்சைகள்
உயிர்கள் யாவுஞ் சேமமதாய்
ஓங்கி வளர்ந்திட வுன்னருளால்
தைரி யந்திட தேகமுற
நின்றுனை நாங்கள் வணங்கிடவே
ஃஹைராய் மழையைப் பொழிந்தருள்வாய்க்
கருணைக் கடலே றஹ்மானே! (அல்லாஹ்)

(21) நெல்நவ தானிய நிலைகொண்டு
நிகரில் லாமல் விளையுண்டு
பல்நக ரெல்லாஞ் செழிப்புண்டு
பசியெனுஞ் சொல்லெல் லாமாண்டு
அல்வழி யென்னுந் துயரகன்று
அனுதின முன்னைத் துதிகொண்டு
நல்நிலை பெறவர மீந்தருள்வாய்
நலமார் எங்கள் றஹ்மானே! (அல்லாஹ்)

(22) நெஞ்சம தால்வரும் பாவங்கள்
நேர்வழி தவறிய பாவங்கள்
வஞ்சினை யாயுறும் பாவங்கள்
வாய்கரங் கால்செய் பாவங்கள்
சஞ்சல முறும்பெரும் பாவங்கள்
ஷறஹினை யிழந்த பாவங்கள்
மிஞ்சிடுஞ் சிறிய பாவங்கள்
முழுதும் பொறுத்திடு ற‌ஹ்மானே! (அல்லாஹ்)

(23) குருமொழி கொள்ளாப் பாவங்கள்
குறைபல செய்த பாவங்கள்
அருள்வழி செல்லாப் பாவங்கள்
அன்னையர் நொந்த பாவங்கள்
திருமொழி தள்ளிய பாவங்கள்
தந்தையர் நொந்த பாவங்கள்
கருவினில் அமைந்த பாவங்கள்
எல்லாம் பொறுத்திடு றஹ்மானே! (அல்லாஹ்)

(24) வறுமை பஞ்சம் ஊழ்வினையும்
வகையறு நாசந் தப்பிதங்கள்
சிறுமை சின்னஞ் செய்பிழையுஞ்
சிலபல ரகசிய பாவங்கள்
மறுமை நினையாப் பாவங்கள்
மடமை மாசுறு மெண்ணங்கள்
நிறைந்த பாவம் அடங்கலையும்
நிவர்த்தி யருள்வாய் றஹ்மானே! (அல்லாஹ்)

(25) “பல்லாக்கு த‌ம்பி” யெனும் மிஸ்கீன்
பகர்ந்த “அல்லாஹ் முனாஜாத்” தால்
பொல்லாத் துன்பந் துயரகலப்
பேணும் நல் வ‌ழியும் சேர
எல்லா முஸ்லிம் ஆண்பெண்கள்
இதய மகிழ்ந்து ஓதிவர
அல்லாஹ் வல்ல பெரியவனே
அருள்வாய் ஆமின் றஹ்மானே! (அல்லாஹ்)

அல்லாஹ் முனாஜாத்

Source: http://pallakku-oliullah.blogspot.sg/

இதாகிறது கீர்த்தி சேர் கீழக்கரை தந்த அருள், சூஃபி ஞானக் கடல் என்றெல்லாம் போற்றக் கூடிய, பல்லாக்கு ஒளியுல்லஹ் என புகழப் பெற்ற, மாண்புமிகு அல்லாமா ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அல்லாஹ் முனாஜாத்.

இப்பாடல்களை பக்தியோடு அனுதினமும் காலை மாலை ஓதி வந்தால் இன்றய விஞ்ஞான உலகத்தின் மருந்துகளால் நலமாகாத மாபெரும் பிணிகள் கூட வல்ல இறைவன் திருவருளால் தீரும். இது அனுபவத்தால் கண்ட உண்மை. மேலும் காலரா, துன்பம் சேர் காலத்திலும் மிக அனுகூலத்தைத் தரும், பி இத்னில்லாஹ்!

பல்லாக்கு வலியுல்லாஹ்

Source: http://nambuthalairasihaja.blogspot.sg/p/razh.html

ஹபீப் முஹம்மத் ஸதக்கதுல்லாஹ் என்ற இயற்பெயருடய இந்த வலி, மஹான் மாப்பிள்ளை லெப்பை வலியுல்லாஹ் அவர்களின் மருகர்.

இவர்கள் நம்புதாளையில் அதிக காலம் வாழ்ந்து அந்த ஊருக்கு வந்த பெரும் நோய் நீங்க துஆ செய்ததோடு, மறுமை நாள்வரை அந்த ஊருக்கு வராமலிருக்க துஆவும் சொல்லித்தந்துள்ளார்கள். இன்றளவும் அவ்வூர் மக்கள் ஒவ்வொரு ஜும்ஆ நாளும் அதை ஓதாமல் பள்ளியை விட்டு வீடு செல்வதில்லை. அங்குள்ள சிறுவர்கள் கூட அவர்களின் மான்பை உணர்ந்துள்ளனர்.

ஒரு முறை இவர்கள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு மீனவர் விலைபோகாத ஒருவகை மீன்களை வலையில் எடுத்து வந்து
“மஹான் அவர்களே! எனக்கு விலைபோகாத இந்த மீன்தான் அடிக்கடி கிடைக்கிறது. இதனால் எனக்கு பெரும் கஷ்டமாக உள்ளது. எனது இந்த வறுமைக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்”என்று கெஞ்சினார். அப்போது மஹான் அவர்கள் கடலுக்கருகில் வந்து அந்த மீன் ஜாதியை பார்த்து அவற்றிடம் “இனிமேல் நீங்கள் இந்த பகுதிக்குள் நுழயக்கூடாது” என்று தடை விதித்தனர்.

ஸுப்ஹானல்லாஹ்! என்ன ஆச்சரியம்!

இன்றுவரை அந்த மீனினமே நம்புதாளைப்பகுதி வாழ் மீனவர்களுக்கு கிடைப்பதில்லை. இது மஹான் ”அவர்கள்” என்பதற்கான பெரும் சான்று.

Success is from Allah and He is the Guide.

Comments are closed.